(UTV | இத்தாலி) – எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் இத்தாலியில் நாடுதழுவிய முடக்க செயற்பாடுகள் அமுல்படுத்தப்படவுள்ளன.
குறித்த காலங்களில், சிவப்பு வலயக் கட்டுப்பாடுகள் இத்தாலி முழுவதிலும் அமுல்படுத்தப்படவுள்ளதுடன், அத்தியாவசிய தேவைகள் அல்லாத வர்த்தக நிலையங்கள், உணவகங்கள் மற்றும் மதுபானசாலைகள் அனைத்தும் மூடப்படவுள்ளன.
இந்த நிலையில் குறித்த முடக்க செயற்பாடுகளை எதிர்வரும் 28 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரையான மூன்று நாட்களுக்கு இலகுபடுத்துவதற்கு எதிர்ப்பார்த்துள்ளதாக இத்தாலி பிரதமர் தெரிவித்துள்ளார்.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්