உள்நாடு

சுகாதார அமைச்சு பொதுமக்களிடம் விடுத்துள்ள கோரிக்கை

(UTV | கொழும்பு) –  நாட்டின் எப்பகுதியிலும் கொரோனா தொற்றாளர்கள் இருக்கக்கூடும் என்பதால், சுகாதார வழிகாட்டல்களை உரியமுறையில் பின்பற்றி செயற்படுமாறும் சுகாதார அமைச்சு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

மேல் மாகாணம் அபாய வலயமாக காணப்பட்டாலும், நாட்டின் ஏனைய சில பகுதிகளில் சிறு கொத்தணிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சுகாதார வழிகாட்டல்களை உரியமுறையில் பின்பற்றாதவிடத்து, மீண்டும் கொரோனா கொத்தணிகள் ஏற்படக் கூடும் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பிலிருந்து பெரும்பாலானவர்கள் வௌி மாவட்டங்களுக்கு சென்றுள்ளதால், அவர்களும் உரிய பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

இதனால் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் உள்ளவர்கள் சுகாதார ஒழுங்கு விதிகளை உரிய முறையில் பின்பற்றுதல் அவசியம் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

தற்பொழுது கொரோனா அச்சுறுத்தல் அதிகளவாகவுள்ள பகுதியில் உள்ள மக்கள் பண்டிகை காலப்பகுதியில் வெளியிடங்களுக்கு செல்வதை முடிந்தவரையில் குறைத்துக்கொள்ள வேண்டும் என சுகாதார பிரிவு அறிவித்துள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை

editor

வாகன இறக்குமதி தொடர்பில் நிதியமைச்சின் எதிர்வுகூறல்!

கல்முனை பேருந்து தரிப்பு நிலையத்தின் அவலம் : மக்கள் புகார் – புகைப்படங்கள்