உள்நாடு

வாகன சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

(UTV | கொழும்பு) –  குடிபோதை மற்றும் பாதுகாப்பற்ற முறையில் வாகனங்களை செலுத்தும் சாரதிகளைக் கைது செய்ய, நாடு முழுவதும் விசேட சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்படவிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரான பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இதன்படி, குறித்த நடவடிக்கைகளை, எதிர்வரும் ஜனவரி மாதம் ஐந்தாம் திகதி வரை முன்னெடுக்க எதிர்பார்ப்பதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

கொவிட்-19 லைரஸ் தொற்று காரணமாக விதிக்கப்பட்ட போக்குவரத்து கட்டுப்பாடுகளினால் கடந்த காலங்களில், விபத்துக்களால் நிகழும் உயிரிழப்புக்களின் எண்ணிக்கை குறைவடைந்திருந்தது.

எனினும், மீண்டும் உயிரிழப்புக்கள் அதிகரித்து வருவதாக தரவுகள் குறிப்பிடுகின்றன.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

உத்தியோகபூர்வ கையிருப்பு 05 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரிப்பு!

வீடுகளில் தனிமைப்படுத்தல் கண்காணிப்புப் பொறிமுறை

ஹம்பாந்தோட்டையில் ‘CHINA’ என்ற வார்த்தை வடிவத்தில் கட்டிடம்