(UTV | கொழும்பு) – நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் 75 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் உள்ளதாக எதிர்வு கூறப்பட்டுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் இன்று விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், வடக்கு , கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் 75 மில்லிமீற்றர் அளவிலான இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் சப்ரகமுவ மாகாணம் உட்பட களுத்துறை காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களில் இன்று பிற்பகல் வேளையில் மழைபெய்யக்கூடும் எனவும் வளிமண்டளவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
எனவே இடியுடன் கூடிய மழைபெய்கின்ற சந்தர்ப்பங்களில் அவதானத்துடன் செயற்படுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්