(UTV | கொழும்பு) – நாட்டில் சில பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துகளினால் நேற்றைய தினம் மாத்திரம் 10 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த வருடத்தின் ஆரம்ப காலப்பகுதியில் நாளொன்றுக்கு சுமார் பத்து உயிரிழப்புகள் விபத்துகளினால் பதிவாகியுள்ளன.
இதேவேளை, மதுபோதையில் வாகனம் செலுத்துதல், அதிக வேகம் மற்றும் கவனயீனம் என்பன விபத்துக்களுக்கு பிரதானமான காரணங்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விடயங்களை முற்றாக கட்டுப்படுத்தும் நோக்கில் விசேட வாகன சோதனை நடவடிக்கைகளை முன்னெடுக்கவும், விதிகளை மீறும் சாரதிகளை கைது செய்யவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகபேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්