வகைப்படுத்தப்படாத

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மேதின கூட்டத்தில் பங்கேற்குமாறு தமிழ், முஸ்லிம் கட்சிகளுக்கு அழைப்பு

(UDHAYAM, COLOMBO) – ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மேதின கூட்டத்தில் பங்கேற்குமாறு தமிழ், முஸ்லிம் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்படும் என்று ராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.

பொருளாதார அரசியல் நிர்வாக துறைகளில் மாற்றங்களை மேற்கொள்வதற்காக எதிர்வரும் மே மாதத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடுமையான தீர்மானங்களை எடுப்பார் என்று ராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.

கண்டி கட்டம்பே மைதானத்தில் இடம்பெறும் மே தின கூட்டத்தில் பங்கேற்குமாறு அனைத்து மக்கள் பிரதிநிதிகளும் எழுத்து மூலம் அறிவிக்க கட்சியின் மத்திய குழுக்கூட்டத்தில் நேற்று தீர்மானிக்கப்பட்டது.

கட்சி உறுப்பினர்கள் ஏனைய மேதினக் கூட்டங்களில் பங்கேற்க வேண்டிய அவசியம் கிடையாதென்று அமைச்சர் வலியுறுத்தினார். நாட்டின் நாலா பாகங்களிலிருந்தும் தோட்டப் பகுதிகளிலிருந்தும் அதிகளவானோர் இதில் பங்கேற்கவுள்ளனர் என்று அவர் கூறினார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் ராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன உரையாற்றினார்.

கூட்டுறவு துறை மீது விதிக்கப்பட்டுள்ள வரியை நீக்குதல், தனியார் துறை ஊழியர்களின் வயதெல்லையை 60 வரை அதிகரித்தல், மென் பவர் சேவை தொடர்பான நெருக்கடி என்பனவற்றை உள்ளடக்கிய பிரேரணை கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

Related posts

கொழும்பில் 46 வது பங்களாதேஷ் பாதுகாப்பு தினம்

Laos national arrested with ‘Ice’ worth over Rs. 40 million

Groenewegen wins stage 7 of Tour de France