வணிகம்

மரக்கறி விலையைக் கட்டுப்படுத்த விசேட வேலைத்திட்டம்

(UTV | கொழும்பு) –  மரக்கறி விலையைக் கட்டுப்படுத்த விவசாய அமைச்சின் நேரடி தலையீட்டுன் அடுத்த வாரம் முதல் விசேட வேலைத்திட்டமொன்று செயற்படுத்தப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

விவசாயிகளிடமிருந்து மரக்கறிகளை கொள்வனவு செய்து அவற்றை பொருளாதார மத்திய நிலையங்களுக்கு கொண்டு வருவதில் விவசாய அமைச்சு தலையிட்டுள்ளதாக, நாரஹேன்பிட்டி பொருளாதார மத்திய நிலையத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

பொருளாதார மத்திய நிலையங்களில் ஒதுக்கப்பட்டுள்ள வியாபார நிலையங்களை வேறு வியாபாரங்களுக்காக குத்தகைக்கு விடுவதை தடுக்கும் விசேட சுற்றறிக்கை ஒன்று எதிர்வரும் ஜனவரி மாதம் வெளியிடப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பருப்பு, சீனி ஆகியவையின் விலையில் உயர்வு

15 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் மட்டக்களப்பு மாவட்டத்தில் நான்கு முக்கிய வீதிகள்

இலங்கை ரூபா பெறுமதி மீண்டும் வீழ்ச்சி