விளையாட்டு

LPL கிண்ணத்தை சுவீகரித்தது ஜப்னா ஸ்டேலியன்ஸ்

(UTV | கொழும்பு) –  2020 லங்கா பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் ஜப்னா ஸ்டேலியன்ஸ் அணி முதலாவது சாம்பியனானது.

நேற்று (16) ஹம்பாந்தோட்டை சூரியவெவ மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் கோல் கிளேடியேட்டர்ஸ் அணி 53 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

இதன்படி முதலில் துடுப்பாடிய ஜப்னா ஸ்டேலியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கட்டுக்களை இழந்து 188 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

சிரேஷ்ட வீரரான சொய்ப் மலிக் 46 ஓட்டங்களையும் தனஞ்சய டி சில்வா 33 ஓட்டங்களையும் பெற்றனர்.

வெற்றியிலக்கை நோக்கி களமிறங்கிய கோல் கிளேடியேட்டர்ஸ் அணி ஆரம்பம் முதலே விக்கெட்களை இழந்தது.

அதன் முதல் 06 விக்கெட்களும் 93 ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்டன.

கோல் கிளேடியேட்டர்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 135 ஓட்டங்களை பெற்றது.

போட்டியில் 53 ஓட்டங்களால் வெற்றியீட்டிய ஜப்னா ஸ்டேலியன்ஸ் அணி சம்பியன் பட்டத்தை சுவீகரித்தது.

போட்டியின் நாயகனாக சொய்ப் மலிக் தெரிவானதுடன்தொடரின் நாயகன் விருது வனிந்து ஹசரங்கவுக்கு வழங்கப்பட்டது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

உலகக்கிண்ண போட்டியை பார்வையிட இரசிகர்களுக்கு அனுமதி

தென்னாபிரிக்கா உடன் மோதிய பாகிஸ்தானுக்கு திரில் வெற்றி

வெளிநாட்டு பயிற்சியாளர்களை நீக்க தீர்மானம்