(UTV | ஹம்பாந்தோட்டை ) – 2020 லங்கா பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் ஜப்னா ஸ்டேலியன்ஸ் அணி முதலாவது சாம்பியனானது.
நேற்று (16) ஹம்பாந்தோட்டை சூரியவெவ மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் கோல் கிளேடியேட்டர்ஸ் அணி 53 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.
இதன்படி முதலில் துடுப்பாடிய ஜப்னா ஸ்டேலியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கட்டுக்களை இழந்து 188 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
கோல் கிளேடியேட்டர்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 135 ஓட்டங்களை பெற்றது.
போட்டியில் 53 ஓட்டங்களால் வெற்றியீட்டிய ஜப்னா ஸ்டேலியன்ஸ் அணி சம்பியன் பட்டத்தை சுவீகரித்தது.
போட்டியின் நாயகனாக சொய்ப் மலிக் தெரிவானதுடன்தொடரின் நாயகன் விருது வனிந்து ஹசரங்கவுக்கு வழங்கப்பட்டது.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්