(UTV | ஸ்பெயின் ) – மனிதர்கள் மட்டுமல்லாமல் புலி, நாய், பூனை, கீரி ஆகிய உயிரினங்களுக்கு ஏற்கனவே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தநிலையில், அந்த வரிசையில் தற்போது சிங்கமும் இணைந்துள்ளது.
இதற்கமைய ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனாவில் உள்ள ஹட்டலன் உயிரியல் பூங்காவில் உள்ள 4 சிங்கங்களுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.
சிங்கங்கள் மூச்சுவிடுவதில் சிரமப்படுவதை கண்ட உயிரியல் பூங்கா கண்காணிப்பாளர் சிங்கங்களுக்கு கொரோனா பரிசோதனை செய்துள்ளார். அந்த பரிசோதனையில் சிங்கங்களுக்கு வைரஸ் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, சிங்கங்கள் அனைத்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், இது தொடர்பாக விலங்குகள் நல அமைப்பிடமும் தகவல் கொடுக்கப்பட்டு தேவையான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாக பூங்கா நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්