(UTV | கொழும்பு) – சிறைக்கைதிகள் தொடர்பில் மனிதாபிமானமாக நோக்கி அவர்களின் குறைபாடுகளை நிவர்த்தி செய்து அவர்களுக்கு தேவையான வசதிகளை வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
சிறைச்சாலைகளில் நிலவும் குறைபாடுகள் மற்றும் பிரச்சினைகள் குறித்து ஆராயவும் தீர்வுகளை பரிந்துரைக்கவும் நேற்று (10) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான 12,000 க்கும் மேற்பட்டோர் சிறையில் உள்ளனர். அவர்கள் குறித்து விசேட கவனம் செலுத்தி புனர்வாழ்வு திட்டத்தை வகுக்க வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி வலியுறுத்தினார்.
வெளிநாடுகளில் உள்ள சிறைச்சாலைகளின் மாதிரிகளை ஆராய்ந்து, வசதிகளை வழங்க உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி வலியுறுத்தினார்.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්