உலகம்

இந்தியாவில் பரவும் மர்ம நோய் – பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

(UTV | இந்தியா) – இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தில், ஏலூரு நகரத்தில்,அடையாளம் காணப்படாத ஒரு விதமான மர்ம நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

கடந்த நான்கு நாட்களில் 525 நோயாளிகள் கால்-கை வலிப்பு, தலைச்சுற்றல் மற்றும் வாந்தி போன்ற அறிகுறிகளுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், மர்ம நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வைத்தியசாலையில் 171 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருவதாகவும், 354 பேர் சிகிச்சை பெற்று வெளியேறியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மர்ம நோய் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், நோய்க்கான காரணத்தை இதுவரை அடையாளம் கண்டறியமுடியவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் ஆந்திர மாநிலத்தில் ஏலூரு நகரில் மர்ம நோயால் பாதிக்கப்பட்டவர்களின் இரத்த மாதிரியை பரிசோதனை செய்ததில் அதில் ஈயம் மற்றும் நிக்கல் துகள்கள் இருப்பது முதல் கட்ட பரிசோதனையில் தெரிய வந்துள்ளதாக அம்மாநில முதல்வர் அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இருளில் மூழ்கிய கியூபா – பாடசாலைகளுக்கு விடுமுறை

editor

ராணியின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு தடையாகும் கொரோனா

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 3 கோடியை கடந்தது