உள்நாடு

கைப்பற்றப்பட்ட 10 மோட்டார் சைக்கிள்களின் இலக்கங்கள் மாற்றம்

(UTV | கொழும்பு) –  கடந்த ஞாயிற்றுக்கிழமை மிரிஹானை பகுதியில் மோட்டார் சைக்கிள் பந்தயத்திற்காக தயார் நிலையிலிருந்த போது கைப்பற்றப்பட்ட 26 மோட்டார் சைக்கிள்களின் 10 மோட்டார் சைக்கிள்கள் செசி (Chassis) இலக்கம் மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தொிவித்துள்ளார்.

குறித்த 10 மோட்டார் சைக்கிள்களையும் அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அனுப்பி அறிக்கை பெறவுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் தொடர்பில் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தொிவித்துள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

வாகன விபத்தில் 04 பேர் உயிரிழப்பு

சிவநேசத்துரை சந்திரகாந்தன் சி.ஐ.டியில் முன்னிலை

editor

நான்காவது டோஸ் தொடர்பில் தீர்மானமில்லை