உலகம்

இங்கிலாந்தில் பயன்பாட்டிற்கு வந்தது கொரோனா தடுப்பூசி

(UTV | இங்கிலாந்து ) –  இங்கிலாந்தில் இன்று முதல் கொரோனா தடுப்பூசி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

கொவிட்-19 தடுப்பூசியைப் பெற்ற உலகின் முதல் நபர் என்ற பெருமையை வடக்கு அயர்லாந்தைச் சேர்ந்த 90 வயதுடைய மூதாட்டியொருவர் பெற்றுள்ளார்.

இன்று காலை 6:31 மணிக்கு (அந் நாட்டு நேரப்படி ) மார்க்ரெட்டுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. தற்போது முதல் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் 21 நாட்களுக்கு பின்னர் செலுத்தப்பட உள்ளது.

அமெரிக்காவின் பைசர் நிறுவனமும், ஜெர்மனியின் பயோஎன்டெக் நிறுவனமும் இணைந்து உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசி 95 சதவிகிதம் செயல் திறன் கொண்டது என தெரியவந்தது. இந்த தடுப்பூசி கொரோனா வைரசை தடுக்க முக்கிய பங்காற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசியின் செயல்திறன் அறிவிக்கப்பட்ட உடன் தடுப்பூசியை இங்கிலாந்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர பைசர் நிறுவனம் அனுமதி கேட்டு விண்ணப்பித்திருந்தது. அந்த விண்ணப்பத்தையடுத்து இங்கிலாந்தில் பைசர் தடுப்பூசியை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர அந்நாட்டு அரசு அனுமதியளித்தது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கொரோனா வைரஸ் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 106 ஆக உயர்வு

மீண்டும் இணையும் காதல் தம்பதி

அமெரிக்காவில் நினைவுநாள் கொண்டாடத்தில் துப்பாக்கிச்சூடு; 9 பேர் பலி