(UTV | கொழும்பு) – மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை சம்பவத்தில் உயிரிழந்த 11 கைதிகளில் இதுவரை 7 பேரின் சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் ஏனைய நால்வரின் சடலங்கள் தொடர்பிலான பிரேத பரிசோதனை இன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්