(UTV | இந்தியா) – இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தில், ஏலூரு நகரத்தில், அடையாளம் காணப்படாத மர்ம நோயால் 300-க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையில், குழந்தைகள், பெண்கள் உட்பட 326 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், ஒருவர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து குடிநீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும் தேசிய வேதியியல் தொழில்நுட்ப மையத்தின் குழு ஒன்றும் இன்று ஏலூரு சென்று ஆய்வுகள் மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
இந்த புதிய மர்ம நோயால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு குமட்டல், வலிப்பு முதல் நினைவிழப்பு வரை பல அறிகுறிகளும் ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
இதனிடையே சூழல் மாசுபாடு காரணமாக இந்த புதிய வகை நோய் ஏற்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්