(UTV | கொழும்பு) – விமான நிலையங்களை மீண்டும் திறப்பது மற்றும் சுற்றுலாப்பயணிகளை நாட்டிற்கு வரவழைப்பது தொடர்பில் விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
கொரோனா தொற்று 2 ஆம் நிலையின் பின்னர் விமான நிலைய நடவடிக்கைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் சுற்றுலாத்துறை மற்றும் சுகாதாரத்தரப்பின் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
குறித்த குழுவின் தலைமையில் சுகாதார அமைச்சில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை சுகாதார வழிமுறைகாட்டல்களுடன் எதிர்வரும் ஆண்டின் முற்பகுதியில் விமான நிலையங்களை திறப்பதற்கு எதிர்ப்பார்த்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්