(UTV | கொழும்பு) – முகக் கவசம் அணியத் தவறிய மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றத் தவறிய குற்றச்சாட்டுக்காக கடந்த 24 மணி நேரப் பகுதியில் 45 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஒக்டோபர் 31 முதல் நேற்று வரையான காலப் பகுதியில் மேற்கண்ட குற்றச்சாட்டுக்காக 1,172 கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதிப் பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.
இவ்வாறான குற்றச்சாட்டுகளில் ஈடுபடும் நபர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ள காவல்துறை தொடர்ந்தும் ரோந்து பணிகளை முன்னெடுக்கும் என்றும் அவர் கூறினார்.