(UTV | கொழும்பு) – கடந்த 24 மணித்தியாலயத்தில் கொவிட் 19 தொற்று காரணமாக மேலும் 7 மரணங்கள் நேற்று பதிவாகின.
இதன்படி, இலங்கையில் பதிவான கொவிட் 19 ஆல் ஏற்பட்ட உயிரிழப்புகளின் மொத்த எண்ணிக்கை 137 ஆக உயர்வடைந்துள்ளது.
பண்டாரகம பகுதியை சேர்ந்த 91 வயதான ஆண் ஒருவர் கடந்த 3 ஆம் திகதி தனது வீட்டிலேயே உயிரிழந்தார். கொவிட் 19 தொற்றுறுதியானதால் ஏற்பட்ட மாரடைப்பே அவரது மரணத்திற்கான காரணம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், சிறைச்சாலை கைதியான 53 வயதுடைய ஆண் ஒருவர் கடந்த 1ஆம் திகதி உயிரிழந்தார். கொவிட் 19 தொற்றினால் ஏற்பட்ட நிமோனியா நிலையே அவர் உயிரிழப்பதற்கான காரணமாகும்.
தெமட்டகொடை பிரதேத்தைச் சேர்ந்த 56 வயதான பெண் ஒருவர் தேசிய தொற்று நோயியல் நிறுவகத்தில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் கடந்த 4ஆம் திகதி உயிரிழந்தார். அவரது மரணத்திற்கான காரணம் கொவிட் 19 தொற்றினால் ஏற்பட்ட நிமோனியா நிலை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பண்டாரகம பகுதியை சேர்ந்த 81 வயதான பெண் ஒருவர் கடந்த மாதம் 28 ஆம் திகதி தனது வீட்டிலேயே உயிரிழந்தார்.கொவிட் 19 தொற்றுடன் ஏற்பட்ட கடுமையான நுரையீரல் நோய் மற்றும் இருதய நோய் நிலை அவரது மரணத்திற்கான காரணம் என தெரியவந்துள்ளது.
இதேவேளை கொழும்பு 13 பகுதியை சேர்ந்த 84 வயதான பெண் ஒருவர் கடந்த 4 ஆம் திகதி தனது வீட்டில் உயிரிழந்தார். கொவிட் 19 தொற்றுடன் நிமோனியா நிலை அதிகரித்தமையே அவரது மரணத்திற்கான காரணம் என அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
வெலிக்கடை சிறைச்சாலை கைதியான 66 வயதுடைய ஆண் ஒருவர் சிறைச்சாலை வைத்தியசாலையில் கடந்த 2 ஆம் திகதி உயிரிழந்தார். மரணத்திற்கான காரணம் கொவிட் 19 தொற்றினால் ஏற்பட்ட நிமோனியா நிலை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை வெல்லம்பிட்டி பகுதியை சேர்ந்த 62 வயதான பெண் ஒருவர் தேசிய தொற்று நோயியல் நிறுவகத்தில் சிகிச்சைப் பெற்ற வந்த நிலையில் தேற்றைய தினம் உயிரிழந்தார்.
அவரது மரணத்திற்கான காரணம் நீரிழிவு, உயர் குருதி அழுத்தம் மற்றும் கொவிட் 19 நிமோனியா நிலைமையுடன் உறுப்புகள் செயலிழந்தமை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும், கடந்த 24 மணித்தியாலத்தில் 669 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதி செய்யப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්