விளையாட்டு

மேத்யூசை வீழ்த்திய தமிழன்

(UTV | கொழும்பு) – லங்கா பிரீமியர் லீக் ரி-20 போட்டியில் நேற்று(04) யாழ்ப்பாணம் ஸ்ராலியன்ஸ் மற்றும் கொழும்பு கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் கொழும்பு கிங்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் ஸ்ராலியன்ஸ் அணியில் முதலாவது போட்டியில் விளையாடிய யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த விஜயகாந்த விஜாஸ்காந்த், கொழும்பு கிங்க்ஸ் அணியின் தலைவர் அஞ்சலோ மேத்யூஸ் விக்கெட்டை வீழ்த்தினார். இது பலரின் கவனத்தை ஈர்த்ததுடன் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

மூன்றாவது ஓவரில் விக்கெட்டினை விழ்த்தியதுடன் 4 ஓவர்கள் பந்துவீசி அவர் 29 ஓட்டங்களைக் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.

அவரது பந்தில் பாகிஸ்தான் வீரர் சொகைப் மலிக்கிடம் பிடிகொடுத்து கொழும்பு கிங்க்ஸ் அணியின் அஞ்சலோ மேத்யூஸ் ஆட்டமிழந்தார்.

Related posts

நியூசிலாந்து குழாம் அறிவிப்பு

ஆறுதல் வெற்றியுடன் வெளியேறியது பாகிஸ்தான் அணி

போட்டி நமக்குக் கைகூடா நிலையில் முடிந்தது – கோஹ்லி