உள்நாடு

கடந்த 24 மணி நேரத்தில் 517 நோயாளிகள் : ஒருவர் பலி

(UTV | கொழும்பு) –   கடந்த 24 மணித்தியாலத்தில் 517 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

அவர்கள் அனைவரும் கொரோனா நோயாளர்களுடன் தொடர்புடையவர்கள் என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதற்கமைய திவுலப்பிட்டிய மற்றும் மினுவாங்கொடை ஆகிய இரட்டை கொத்தணிகளில் தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 23,005 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் நாட்டில் இதுவரையில் 26,559 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது.

இந்தநிலையில் தொற்றுதியான 6,922 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்

இதற்கமைய கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 19,438 ஆக அதிகரித்துள்ளது.

நேற்றைய தினம்(04) ஒருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியிருந்தார்.

அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 130 ஆக அதிகரித்துள்ளது.

பிலியந்தலை பிரதேசத்தை சேர்ந்த 72 வயதுடைய ஆண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கடன் தரப்படுத்தலில் இலங்கையை மேலும் தாழ்த்திய மூடிஸ் நிறுவனம்

முரணான தகவல்களால் ஈஸ்டர் தாக்குதலில் சந்தேகம் –  சர்வதேச விசாரணையை வலியுறுத்துகிறார் ரிஷாட்

சீன இராணுவப் பயிற்சிக் கப்பல் இலங்கைக்கு வருவதற்கு அரசாங்கம் அனுமதி – அமைச்சர் விஜித ஹேரத்

editor