(UTV | கொழும்பு) – புரேவி சூறாவளி காரணமாக 06 மாவட்டங்களை சேர்ந்த 44,848 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், 13,368 குடும்பங்களை சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, புரேவி சூறாவளியால் 12 மாவட்டங்களில் 2,467 கட்டடங்களுக்கு சேதமேற்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
50 வீடுகள் முழுமையாகவும் 2,148 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாகவும் நிலையம் தெரிவித்துள்ளது.
மேலும், இழப்பீடுகள் தொடர்பான மதிப்பீட்டின் போது முதல் சந்தர்ப்பத்தில் 10,000 ரூபா நிவாரணம் வழங்க எதிர்பார்த்துள்ளதாக மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.
மீனவர்கள் மற்றும் கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலிம் தெரிவித்துள்ளார்.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්