உலகம்

100 நாட்களுக்கு முகக்கவசம் அணியுமாறு கோரிக்கை

(UTV | அமெரிக்கா) –  தாம் ஜனாதிபதியாக கடமைகளை பொறுப்பேற்பது முதல் நூறு நாட்களுக்கு தொடர்ந்து முகக்கவசம் அணியுமாறு அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள ஜோ பைடன் அமெரிக்க மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

முகக்கவசம் அணிவதனூடாக நாட்டில் கொரோனா தொற்றை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியுமென தாம் நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.

அமெரிக்க எயார்லைன்ஸ், விமான நிலையங்கள் மற்றும் பொது இடங்களில் முகக்கவசம் அணிய வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் அதிகளவில் பரவியுள்ள நிலையில் இதுவரை அங்கு 14 மில்லியன் பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன், இரண்டு இலட்சத்து 75 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கொரோனா : தீவிரமாகவுள்ள இரண்டாம் அலை

சீனாவில் பாரிய மண்சரிவு!

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை வீழ்ச்சி!