உள்நாடு

கொவிட் தொற்றாளர்களை அழைத்துச் சென்ற பஸ் விபத்து

(UTV | மட்டகளப்பு ) –  மட்டகளப்பு – புனானை சிகிச்சை நிலையத்திற்கு கொவிட் தொற்றாளர்களை அழைத்துச் சென்ற பஸ் விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் நால்வர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளரும் பிரதிப் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

வெலிகந்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அசேலபுர பகுதியில் இன்று காலை கொழும்பிலிருந்து புனானை கொவிட் சிகிச்சை நிலையத்திற்கு கொவிட் தொற்றாளர்களை ஏற்றிச் சென்ற பஸ் , பிரிதொரு பஸ் மீது மோதி இந்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பஸ்ஸில் 23 தொற்றாளர்கள் இருந்துள்ளதுடன், அவர்களில் இருவர் காயமடைந்துள்ளனர்.

இதன்போது காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிகந்த பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

தபால்மூல வாக்களிப்பு – விண்ணப்பிக்கும் காலம் நீடிப்பு

மத்திய வங்கி கட்டிடத்திலிருந்து கீழே விழுந்த இளைஞன் பலி

அனுமதியின்றி சிவனொளிபாத மலைக்கு செல்வது தடைசெய்யப்பட்டுள்ளது!