(UTV | கொழும்பு) – புரெவி சூறாவளி கிழக்கு கரையோரத்திலிருந்து மேற்கு நோக்கி மன்னார் வளைகுடாவினூடாக வெளியேறும் என எதிர்பார்க்கப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதன் காரணமாக இன்று (02) வடக்கு, வட மத்திய, கிழக்கு, வட மேற்கு, மேற்கு, மத்திய மற்றும் சபரகமுவ ஆகிய மாகாணங்களில் 80 – 100 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
இவை தவிர்ந்த ஏனைய மாகாணங்களில் 60 முதல் 70 கி.மீ. வேகத்தில் காற்று வீசும்.
இதேவேளை, Burevi சூறாவளியின் காரணமாக இன்று (02) வடக்கு, வட மத்திய, கிழக்கு மற்றும் வட மேல் ஆகிய மாகாணங்களில் 200 மி.மீ. வரையான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්