உள்நாடு

மஹர சிறைச்சாலை அமைதியின்மை : உயிரிழப்பு அதிகரிப்பு

(UTV | கொழும்பு) –  மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக கைதிகள் 8 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 45 கைதிகள் காயமடைந்துள்ளதாக ராகம வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்தவர்களின் சடலம் ராகம வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மஹர சிறைச்சாலையின் கைதிகள் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து மேலும் சில கைதிகள் சிறைச்சாலையில் இருந்து தப்பிச் செல்ல முயற்சித்த சம்பவம் காரணமாக நேற்று(29) அமைதியின்மை ஏற்பட்டது.

எவ்வாறாயினும் சிறைச்சாலையில் ஏற்பட்டிருந்த அமைதியின்மை தற்போது முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சிறைச்சாலை பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் உட்பட பொலிஸ் அதிகாரிகள் குறித்த பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

தீவிரவாத குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசேட வர்த்தமானி

காமினி லொக்குகேவின் சாரதி கொலை : பிரதான சந்தேகநபர் கைது

நிவாரணங்கள் வழங்க அரச அதிகாரிகளை இணைத்துக்கொள்ள நடவடிக்கை