(UTV | கொழும்பு) – இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 22,501 ஆக உயர்வடைந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது .
இதற்கமைய நேற்றைய தினத்தில் 473 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பேலியகொடை மீன் சந்தை கொத்தணியுடன் தொடர்புடைய 472 பேருக்கும், வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பிய கடலோடி ஒருவருக்கும், நேற்று கொவிட் 19 தொற்று கண்டறியப்பட்டது.
இதேவேளை நாட்டில் இதுவரை இந்த தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 16,226 ஆக அதிகரித்துள்ளது.
இந்தநிலையில் 6,168 பேர் நாடளாவிய ரீதியில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனையடுத்து நாட்டில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 107 ஆக உயர்வடைந்துள்ளது.
நாட்டில் நாளாந்தம் அடையாளம் காணப்படுகின்ற தொற்றாளர்களில் அதிகளவானோர் கொழும்பிலுள்ளவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්