உள்நாடுவிளையாட்டு

முதல் வெற்றி கொழும்பு கிங்ஸ் அணிக்கு

(UTV | ஹம்பாந்தோட்டை) –  லங்கா பிரிமியர் லீக் தொடரின் (LPL) முதலாவது போட்டியில் கண்டி டஸ்கர்ஸ் அணியை, கொழும்பு கிங்ஸ் அணி சுப்பர் ஓவரில் வெற்றி பெற்றது .

ஹம்பாந்தோட்டையில் நேற்று இரவு இடம்பெற்ற இந்த போட்டியில் நாணயசுழற்சியில் வெற்றி பெற்ற கொழும்பு கிங்ஸ் அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது

இதன்படி, முதலில் துடுப்பாடிய கண்டி டஸ்கர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 3 விக்கட்டுக்களை மாத்திரம் இழந்து 219 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது .

220 என்ற ஓட்ட இலக்கை நோக்கி துடுப்பாடிய கொழும்பு கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கட்டுக்களை இழந்து 219 பெற்ற நிலையில், போட்டி சமநிலையானது .

இதனையடுத்து வீசப்பட்ட சுப்பர் ஓவரில் கொழும்பு கிங்ஸ் அணி 1 விக்கட்டை இழந்து 16 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

இந்நிலையில் 17 என்ற வெற்றியிலக்கை நோக்கி சுப்பர் ஓவரில் துடுப்பாடிய கண்டி டஸ்கர்ஸ் அணி 12 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியடைந்தது.

போட்டியின் ஆட்டநாயகனாக தினேஷ் சந்திமால் தெரிவானார்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஜனாதிபதியின் வேண்டுகோள்

 தமிழர் தரப்புக்கும் – அரசுக்கும் இடையில் ஆரம்பமாகியுள்ள பேச்சு வார்த்தை கடந்தகாலங்கள் போன்று மாறிவிடக்க்கூடாது

இலங்கை அணி 6 விக்கட்டுக்களால் வெற்றி