உள்நாடு

கடந்த 24 மணி நேரத்தில் கொழும்பில் 259 தொற்றாளர்கள்

(UTV | கொழும்பு) – கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் 459 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியானது.

பேலியகொடை கொத்தணியில் கொவிட் 19 தொற்றுறுதியானவர்களுடன் தொடர்புடைய 458 பேருக்கும், கட்டாரில் இருந்து நாடு திரும்பிய ஒருவருக்கும் இவ்வாறு நேற்றைய தினம் கொவிட் 19 தொற்றுறுதியானது.

மினுவாங்கொடை ஆடை தொழிற்சாலை மற்றும் பேலியகொடை மீன் சந்தை கொத்தணியில் மாத்திரம் இதுவரை கொவிட் 19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 17,436 ஆக உயர்வடைந்துள்ளது.

இதற்கமைய, நாட்டில் இதுவரை கொவிட் 19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 20,967 ஆக காணப்படுகின்றது.

நேற்றைய தொற்றாளர்களின் விபரம்

– 259 கொழும்பு
– 78 களுத்துறை
– 23 கம்பஹா
– 16 கண்டி
– 04 காலி
– 04 நுவரெலியா
– 01 யாழ்ப்பாணம்
– 01 மாத்தறை
– 01 இரத்தினபுரி
– 01 அநுராதபுரம்
– 19 பொலிஸ்
– 17 விசேட அதிரடிப் படையினர்
– 24 கைதிகள்
– 01 வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பியோர்
– 10 ஏனையவர்கள்

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

உயிரிழந்தவர்களுக்காக இரண்டு நிமிட மௌன அஞ்சலி

ஆபாச வீடியோக்களில் இலங்கையர்கள் காணப்படுவது அதிகரிப்பு!

தேசிய நிறுவனத்தை மூடுவதற்கு அமைச்சரவை அனுமதி