(UTV | கொழும்பு) – நாட்டில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 90 ஆக அதிகரித்துள்ளது.
நேற்றைய தினம் (23) மேலும் 3 மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
நாட்டில் கொரோனா தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 20,508 ஆக அதிகரித்துள்ளது.
இதற்கமைய நாட்டில் நேற்றைய தினம் 337 பேருக்கு கொரோனா வைரஸ் தொடருடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
பேலியகொடை கொத்தணியில் கொவிட் 19 தொற்றுறுதியானவர்களுடன் தொடர்புடைய 335 பேருக்கும், இந்தியா மற்றும் துருக்கி ஆகிய நாடுகளில் இருந்து இலங்கை வந்த தலா ஒருவருக்கு இவ்வாறு நேற்றைய தினம் கொவிட் 19 தொற்றுறுதியானது.
மினுவாங்கொடை ஆடை தொழிற்சாலை மற்றும் பேலியகொடை மீன் சந்தை கொத்தணியில் மாத்திரம் இதுவரை கொரோனா தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 16,978 ஆக உயர்வடைந்துள்ளது.
இதேவேளை, நாட்டில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 14,497 ஆக அதிகரித்துள்ளது.
இந்தநிலையில் 5921 பேர் நாடளாவிய ரீதியில் உள்ள மருத்துவமனைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්