உள்நாடு

வானிலை சிவப்பு எச்சரிக்கை

(UTV | கொழும்பு) –  தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் (02N – 10N> 83E – 93E) ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசம் உருவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த 24-48 மணித்தியாலங்களில் ஒரு தாழமுக்கமாக விருத்தியடையக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இத் தொகுதியானது மேற்கு – வடமேற்கு திசையில் 24ஆம் திகதியளவில் இலங்கையின் வடக்கு, கிழக்கு கரைகளை நோக்கி நகரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது., வடக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேற்குறிப்பிட்ட பிரதேசங்களில் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள் என்றும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

2020 : 6 புதிய அரசியல் கட்சிகளை பதிவு

பேலியகொட மீன் சந்தை பண மாற்றம் ஆன்லைன் முறையில்

இராஜாங்க அமைச்சர்கள் திங்களன்று பதவியேற்க உள்ளனர்