உள்நாடு

“ஹுஸ்ம தென துரு” தேசிய மர நடுகை திட்டம்

(UTV | கொழும்பு) – இரண்டு மில்லியன் மரக்கன்றுகளை நடும் “ஹுஸ்ம தென துரு” தேசிய மர நடுகை திட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் ஆரம்பமானது.

சுபீட்சத்தின் நோக்கு அரச கொள்கை பிரகடனத்தின் படி, நாட்டின் வனப்பகுதியை 30% ஆக அதிகரிக்க எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கேற்ப சுற்றாடல் அமைச்சினால் இந்த நிகழ்ச்சித் திட்டம் திட்டமிடப்பட்டுள்ளது.

வளிமண்டலத்தில் கார்பனீரொட்சைட்டின் அளவைக் குறைத்து, ஒட்சிசனின் அளவை அதிகரிக்கும் நோக்கத்துடன், அந்தந்த பிரதேசங்களுக்கு பொருத்தமான மரங்கள் நடப்படுகின்றன. அடுத்த ஐந்து ஆண்டுகளில் 02 மில்லியன் மரக்கன்றுகளை நடுவதற்கு சுற்றாடல் அமைச்சு திட்டமிட்டுள்ளது.

இந்த திட்டத்தை மத்திய சுற்றாடல் அதிகார சபையும் சுற்றாடல் அமைச்சும், பாதுகாப்பு தலைமையகம் மற்றும் இலங்கை இராணுவமும் இணைந்து செயல்படுத்துகின்றன.

ஜனாதிபதி நேற்று (20) முற்பகல் பத்தரமுல்லையில் மத்திய சுற்றாடல் அதிகாரசபைக்கு முன்னால் உள்ள பாதுகாப்பு தலைமையகத்தின் நுழைவாயிலுக்கு அருகில் முதலாவது மரக்கன்றாக வெள்ளை சந்தன மரக்கன்றொன்றை நாட்டினார்.

சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர மற்றும் இராணுவ பணிக்குழாம் பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா ஆகியோரும் மரக்கன்றுகளை நட்டி இந்த நிகழ்ச்சித்திட்டத்தில் இணைந்தனர்.

நாடு முழுவதும் மரக்கன்றுகளை விநியோகிப்பதை ஆரம்பித்து வைக்கும் வகையில் பாடசாலை மாணவர்களுக்கு மரக்கன்றுகள் விநியோகிக்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் சுற்றாடல் அமைச்சின் செயலாளர் அனில் ஜாசிங்க உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

நாடு திரும்பும் மியன்மாரில் சிக்கிய இலங்கையர்கள்

இலங்கை யாத்திரர்கள் இன்று மீண்டும் இலங்கைக்கு

வேட்புமனுத் தாக்கல் இன்று நண்பகலுடன் நிறைவு

editor