உள்நாடு

லலித் வீரதுங்க – அனுஷ பெல்பிட : அனைத்து குற்றச்சாட்டுக்களிலும் இருந்து விடுதலை

(UTV | கொழும்பு) – ´சில் ஆடை´ வழக்கு தொடர்பில் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் அனுஷ பெல்பிட ஆகியோரை குறித்த அனைத்து குற்றச்சாட்டுக்களிலும் இருந்து விடுதலை செய்யுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குமதுனி விக்கிரமசிங்க மற்றும் தேவிகா அபேரத்ன ஆகிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் குழாமினால் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தீர்ப்பினை வழங்கிய நீதிபதி குமதுனி விக்கிரமசிங்க, குறித்த வழக்கின் மனுதாரர் தரப்பினர் மற்றும் சட்டமா அதிபரால் முன்வைக்கப்பட்ட விடயங்களை விரிவாக பகுப்பாய்வு செய்து இந்த தீர்ப்பினை வழங்கியதாக குறிப்பிட்டார்.

´சில் ஆடை´ வழக்கு தொடர்பில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு மூன்று வருடம் சிறைத்தண்டனை மற்றும் அபராதத் தொகை விதிக்கப்பட்ட நிலையில் இவர்கள் பிணையில் விடுதலை செய்யப்பட்டு இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

கொத்து மற்றும் சோற்றுப் பொதிகளுக்கான விலை 10% உயர்வு

வாகன இறக்குமதிக்கு பல பிரிவுகள் கீழ் அனுமதி வழங்கப்படும்

editor

அடையாள அட்டையை எப்படி காட்ட வேண்டும் தெரியுமா? [VIDEO]