உள்நாடு

அரசின் தோல்வி ஒவ்வொரு வினாடியிலும் உறுதியாகிறது

(UTV | கொழும்பு) – அரசாங்கம் பதவிக்கு வந்து 1 வருட காலம் பூர்த்தியாகின்ற நிலையில், அரசாங்கத்தின் தோல்வி ஒவ்வொரு வினாடியிலும் உறுதி செய்யப்பட்டு வருவதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

வரவு செலவு திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றிய அவர், அரசாங்கத்தை விமர்சிக்கும் ஊடகங்களுக்கு அச்சுறுத்தல் விடுப்பதாகவும், இந்த செயற்பாட்டுக்கு நாம் இடமளிக்க மாட்டோம் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

அரசாங்கம் தயவு செய்து இது தொடர்பில் அரசியல் யாப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் கூறினார். எந்த வகையிலும் ஊடகங்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள், அழுத்தங்களுக்கு நாம் எதிரானவர்கள். கைது செய்யப்படுகின்றனர் இது நாட்டின் ஜனநாயகத்திற்கும், ஊடக உரிமைக்கும் பாரிய பாதிப்பாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இதுவரையில் 2,907 பேர் பூரண குணம்

கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு

வாகன இறக்குமதி குறித்து புதிய தகவல்.