(UTV | கொழும்பு) – உள்ளூர் டின் மீன் உற்பத்திகளை அதிகரிப்பதற்கு தேவையான பூரண ஒத்துழைப்பு வழங்கப்படும் என உறுதியளித்த அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா மற்றும் பந்துல குணவர்த்தன ஆகியோர் டின் மீன்களுக்கான சில்லறை விலையை 200 ரூபாய் எனவும் நிர்ணயம் செய்துள்ளனர்.
உள்ளூர் டின் மீன் உற்பத்தியாளர்களுக்கும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றம் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தன ஆகியோருக்கும் இடையில் நேற்று (18) வர்த்தக அமைச்சில் நடாத்தப்பட்ட கலந்துரையாடலினை தொடர்நதே குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தற்போதைய அசாதாரண சூழலை கருத்தில் கொண்டு உற்பத்தி செய்யப்படுகின்ற டின் மீன்களை சதொச மற்றும் கூட்டுறவு விற்பனை நிலையங்களின் ஊடாக சில்லரை விலை 200 ரூபாவிற்கு விற்பனை செய்வதற்கு வழங்குமாறு அமைச்சர்கள் விடுத்த கோரிக்கைக்கு டின் மீன் உற்பத்தியாளர் சங்கம் முழுமையான இணக்கத்தை தெரிவித்தனர்.
இந்நிலையில், உடனடியாக தொலைபேசியில் சதொச நிறுவனத்தின் தலைவருடன் உரையாடிய அமைச்சர் பந்துல குணவர்த்ன, உள்ளூர் டின் மீன் உற்பத்தியாளர்களின் முழுமையான உற்பத்திகளையும் 198 ரூபா வீதம் கொள்வனவு செய்து 200 ரூபா சில்லரை விலைக்கு இலங்கை முழுவதும் உள்ள கூட்டுறவு சங்கங்கள் ஊடாக விற்பனை செய்வதற்கு ஏற்பாடுகளை செய்யுமாறும் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யும் எந்த டின் மீனாக இருந்தாலும் அதனை 200 ரூபாவிற்கு மேல் விற்பனை செய்ய வேண்டாம் எனவும் அறிவுறுத்தல்களை வழங்கினார்.
BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්