உலகம்

டிரம்பின் குற்றச்சாட்டை மறுத்த தேர்தல் அதிகாரி நீக்கம்

(UTV | கொழும்பு) –  அமெரிக்க தேர்தலில் தபால் வாக்குகள் பதிவில் மோசடி நடந்ததாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறுவதை ஏற்க முடியாது என்று தெரிவித்த தேர்தல் அதிகாரி கிறிஸ் கிரெப்ஸ், அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

நடந்து முடிந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில், தபால் வாக்குப்பதிவு தொடர்பாக டொனால்ட் டிரம்ப் வெளியிட்ட கருத்துகளுக்கு மாறாக, தேர்தல் வாக்குப்பதிவு நடைமுறைகள் அனைத்தும் நம்பகத்தன்மை மிக்கவை என்று கிறிஸ் கிரெப்ஸ் கூறியிருந்தார்.

இந்த நிலையில், தேர்தல் துறையின் அங்கமான சைபர் பாதுகாப்பு மற்றும் உள்கட்டமைப்பு பாதுகாப்பு முகமையின் இயக்குநர் பொறுப்பில் இருந்து கிறிஸ் கிரெப்ஸ் நீக்கட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

 

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இந்தியாவில் 1 மில்லியனை கடந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை

அகதிகளை வெளியேறுமாறு பாக்கிஸ்தான் அரசாங்கம் உத்தரவு!

கொவிட் 19 – மிகக்கடுமையான உலகளாவிய சுகாதார அவசரநிலை