(UTV | கொழும்பு) – சுமார் மூன்றரை வருட காலத்திற்கு கொரோனா வைரஸ் தொற்றுடன் இருக்க வேண்டிய நிலை ஏற்படும் என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே இன்று பாராளுமன்றத்தில் கேட்ட வாய்மூலமான கேள்விக்கு அமைச்சர் இவ்வாறு பதிலளித்தார்.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் ஏறபட்ட ஆரம்ப காலத்தில் கடைப்பிடிக்கப்பட்ட நடைமுறைகள் தற்போது பின்பற்றப்படுவதில்லை. உலக சுகாதார அமைப்பே எமக்கு ஆலோசனைகளை வழங்குகிறது என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்த வைரஸ் தொடர்பில் ஆரம்பகால பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்துக்கு அமைய நாம் ஆரம்ப காலத்தில் முழு நாட்டையும் முடக்கி இருந்தோம். மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் ஏற்பட்டிருப்பதையடுத்து முழு நாட்டையும் முடக்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு எமக்கு ஆலோசனை வழங்கவில்லை எனவும் இந்த வைரஸ் உடனேயே நாம் வாழவேண்டிய நிலையுள்ளது. முழு நாட்டையும் எப்பொழுதும் முடக்கி வைக்கவும் முடியாது எனவும் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அன்று மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்படுவதில்லை. தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப மேற்கொள்ளப்படும் தீர்மானத்திற்கு அமையவே இது தொடர்பில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්