(UTV | கொழும்பு) – தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்கள் தங்களின் வீடுகளில் இருந்து வௌியேறுபவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
நாடளாவிய ரீதியில் 77,531 பேர் சுய தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் தங்களின் வீடுகளில் இருந்து வௌியில் செல்கின்றமை தொடர்பில் தகவல்கள் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சுகாதார தரப்பினரும் பொலிஸாரும் இணைந்து தனிமைப்படுத்தியுள்ளவர்களை கண்காணிப்பதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் தொடர்ந்தும் நடமாட்ட கட்டுப்பாடு கடுமையாக அமுலாக்கப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண மேலும் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய 24 பொலிஸ் அதிகார பிரதேசங்களில் தற்போது தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும் அமுல்ப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அங்கு நடமாட்ட கட்டுப்பாடுகள் கடுமையாக விதிக்கப்பட்டுள்ளதோடு, பிரதேசவாசிகள் தங்களது வீடுகளிலேயே இருக்குமாறு அவர் கோரியுள்ளார்.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්