உள்நாடு

8 மாவட்டங்களில் 401 கொவிட் தொற்றாளர்கள்

(UTV | கொழும்பு) – நாட்டில் இதுவரையான காலப்பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 18, 075 ஆக அதிகரித்துள்ளது.

இதன்படி, நேற்றைய தினம்(17) 401 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம்(17)  அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுள் அதிகளவானவர்கள் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என கொரோனா தடுப்பு தேசிய செயலணி தெரிவித்துள்ளது.

இதன்படி கொழும்பு மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான 201 பேர் நேற்றைய நாளில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனிடையே மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை ஆகியவற்றுடன் தொடர்புடைய கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 14,564 ஆக காணப்படுகின்றது.

மேலும் கொரோனா உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 66 ஆக அதிகரித்துள்ளதுடன் 5799 பேர் வைத்தியிசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.

No description available.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

தாயக மக்கள் கட்சியில் இணைந்த தஹாம் சிறிசேன, ராஜிகா விக்ரமசிங்க

editor

கொழும்பில், 2500 வீடுகளுக்கு நிதி ஒதுக்கீடு

இன்று முதல் உணவுப் பொதிகளின் விலை, பாண் விலை அதிகரிப்பு