உள்நாடு

யாசகர்களுக்கு பணம் வழங்கும் சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

(UTV | கொழும்பு) –  வீதி சமிஞ்சைகளில் பச்சை விளக்கு ஒளிரும் போது யாசகம் வழங்குவோர் மற்றும் சமிஞ்சைக்கட்டமைப்பு அருகில் பொருட் கொள்வனவில் ஈடுபடும் நபர்களுக்கு  எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வீதி சமிஞ்சைகளுக்கு அருகில் யாசகர்களுக்கு பணம் வழங்கும் சாரதிகளுக்கு எதிராக எதிர்வரும் நாட்களில் சட்டநடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும் கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் யாசகத்தில் ஈடுபடும் பல யாசகர்கள் வியாபாரமாக அதனை மேற்கொள்வதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் வியாபார நோக்கத்தில் யாசகத்தில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பிரியங்கவுக்கு எதிரான தீர்ப்பு இங்கிலாந்து உயர் நீதிமன்றினால் இரத்து

இதுவரையில் 93,884 பேர் பூரண குணம்

இலங்கையின் 9 வது ஜனாதிபதியாக அநுரகுமார தெரிவு

editor