உள்நாடு

2021 வரவு – செலவுத் திட்ட பாராளுமன்ற உரை ஆரம்பம் [LIVE]

(UTV | கொழும்பு) –  2021 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் நிதி அமைச்சர், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் பாராளுமன்றத்தில் தற்போது சமர்பிக்கப்பதற்கான உரை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

நிதியமைச்சர் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ வரவு செலவு திட்டம் தற்போது தற்போது பாராளுமன்றில் உரையாற்றிவருகிறார்.

கொழும்பு துறைமுக நகர் திட்டத்தை அபிவிருத்தி செய்ய தேவையான சட்ட வரைபுகளை உருவாக்குவதும், இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்புகளும், வெளிநாட்டு நிதியில் அவர்களுக்கான சம்பள கொடுப்பனவுகளும் வழங்கப்படும். 

ஆண், பெண் இருபாலாருக்கும் ஓய்வூதிய வயதெல்லை  60. தனியார் மற்றும் அரச ஊழியர்கள் சகலருக்கும் ஒரே சட்டம்.

அரச ஊழியர்கள் வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ளும் நேரங்களில் இரண்டு வருட விடுமுறை வழங்க தீர்மானம்.

அரச ஊழியர்கள் பெற்றுக்கொண்டுள்ள வீட்டுக்கடனுக்கான வட்டியை 7 வீதம் வரை குறைக்க நடவடிக்கை.

மத்திய வங்கியின் கீழ் பதிவு செய்யப்பட்ட நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகளை கண்காணிக்கும் சட்ட திட்டங்கள் கொண்டுவரப்படும்.

குறைந்த மற்றும் மத்திய வருமானம் பெறுபவர்களுக்கு 50 ஆயிரம் புதிய வீடுகள் மற்றும் வீடு விலைக்கு வாங்குபவர்களுக்கு நிவாரண வட்டிக்கடன்

தோட்டத்தொழிலாளர்களுக்கான மாதாந்த கொடுப்பனவு 2021 ஜனவரி மாதம் முதல் 1000 ரூபா வழங்கப்படும்.

நாட்டின் சீனி உற்பத்தி மற்றும் எத்தனோல் உற்பத்தியை அதிகரிக்க தொழிற்சாலைகளை நீவீனப்படுத்த விசேட திட்டம்

மீன்பிடித்துறையை மேம்படுத்தும் விசேட திட்டமொன்றை 2021- 2023 ஆண்டு காலப்பகுதியில் முன்னெடுப்போம்.

சர்வதேச கிரிக்கெட்டிற்காக தகவல் மற்றும் நீவீன தொழிநுட்ப வசதிகள் கொண்ட நவீன விளையாட்டு நகரமொன்றை சூரியவெவ பிரதேசந்தில் நிர்மாணிக்க நடவடிக்கை எடுக்கப்படும். 

டிஜிட்டல் இலங்கையை உருவாக்குவது அரசாங்கத்தின் நோக்கம். 100 வீத 4G திட்டத்தை முழு நாட்டிற்கும் கொண்டு சேர்ப்பது, இதற்காக 15 ஆயிரம் மில்லியன் ரூபா முதலீடு செய்யப்படும்

மக்கள் பாதுகாப்பிற்காக விசேட பொலிஸ் சேவை – இதற்காக 2500 மில்லியன் ரூபாய் மேலதிக ஒதுக்கீடு 

முப்படைகளின் அபிவிருத்தி மற்றும் தொழிநுட்ப, அடிப்படை தேவைகள் குறித்த குறுகிய மற்றும் இடைக்கால தேவைக்காக மேலதிகமாக 20 ஆயிரம் மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படுகின்றது.

இந்துசமுத்திரத்தில் எமது நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்தும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும்.

போதைப்பொருள் வியாபாரத்தை கட்டுப்படுத்தவும், சர்வதேச போதைப்பொருள் கடத்தல் காரர்களின் மையமாக இந்த நாட்டினை பயன்படுத்துவதை முழுமையாக நிறுத்தியாக வேண்டும். 

நாட்டின் வளங்களை பாதுகாக்க இலங்கை கடற்படையை பலப்படுத்தும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும்.

தேசிய பாதுகாப்பை பலப்படுத்த முப்படைகளின் திறன்களைக்கூட்டவும், நவீன தொழிநுட்பங்களை பெற்றுக்கொடுக்கவும் இடைக்கால வேலைத்திட்டமொன்று உருவாக்கப்படும். 

பல்வேறு நிறுவனங்களினால் சட்டத் தன்மைகளுக்கு கட்டுப்பட்டு முன்னெடுக்கப்படும், மதுபானம், சிகரெட், சூதாட்டம் என்பவற்றிற்கு 50 வீதத்திற்கும் அதிகமான பொருட்கள் மற்றும் சேவை வரி அறவிடப்படும். 

வரிக்கொள்கையில் மாற்றமில்லை, அடுத்த ஐந்து ஆண்டுகளில் 2020 ஆம் ஆண்டுக்கான  வரிக்கொள்கையைப் பின்பற்றி பொருளாதாரத்தை முன்னெடுப்போம். மாதம் 25 மில்லியனுக்கு அதிகமான வியாபாரத்திற்கு 8 வீத வற்வரி அறவிடப்படும்.

அரச வருமானம் மற்றும் அரச செலவுக்கு இடையிலான நூறுக்கு 7 வீத இடைவெளியை 4 வீதத்திற்கு குறைக்க நடவடிக்கை எடுப்போம்.

தேசிய வருமானத்தில் உள்ள 90 வீத அரச கடன்களை 70 வீதமாக குறைக்கவும், சர்வதேச கடன்களை குறைத்துக்கொள்ளவும் கவனம் செலுத்தப்படும். 

மக்களை சார்ந்த அரச சேவையே மக்களின் எதிர்பார்ப்பாகும், கடந்த காலங்களைப் போன்று இல்லாது பொறுப்புக்கூறலுடனும் வீண் விரயமற்ற அரச சேவையை உருவாக்குவோம், அரச சேவையாளர்கள் அரசியல் பழிவாங்கலுக்கு உட்படுத்தப்படுவதை நாம் கண்டிக்கிறோம். 

இறக்குமதி வர்த்தகத்தை விடுத்து முழுமையான விவசாய மற்றும் கமத்தொழில் உற்பத்தியை முதன்மைப்படுத்திய பொருளாதாரமே எமது நோக்கமாகும். 

கொவிட் –19 வைரஸ் தொற்றுநோய் மற்றும் தொற்றா நோய்களில் இருந்து எமது மக்களை முழுமையாகக் காப்பாற்றுவதே எமது முக்கிய நோக்கமாக உள்ளது – பிரதமர்

 

———————————————————————-[UPDATE 09.27 A.M]

2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் பாராளுமன்றில்

(UTV | கொழும்பு) –  2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் பாராளுமன்றத்தில் இன்று (17) சமர்ப்பிக்கப்படவுள்ளது.

பிரதமரும் நிதி அமைச்சருமான மஹிந்த ராஜபக்ஸவினால் இன்று பிற்பகல் 1.40 க்கு வரவு செலவு திட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

பாராளுமன்றத்தில் சுமார் ஒன்றரை மாத காலத்திற்கு வரவு செலவு திட்டத்திற்கான செயற்பாடுகள் இடம்பெற வேண்டியுள்ளது.

இதன் முதலாவது நடவடிக்கையாக அரசாங்கத்தின் உத்தேச செலவு மதிப்பீடுகள் மற்றும் கடன் பெறும் கால எல்லை அடங்கிய நிதி ஒதுக்கீட்டு சட்டமூலம் கடந்த ஒக்டோபர் மாதம் 20 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

அடுத்த ஆண்டுக்கான அரசாங்கத்தின் உத்தேச செலவு 2,678 பில்லியன் ரூபா என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2021 ஆம் ஆண்டுக்கான அரச நிதி ஒதுக்கீட்டின்போது அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுகளுக்கு போன்றே இராஜாங்க அமைச்சுகளுக்கும் தனித்தனியாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும்.

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சு, உள்ளக பாதுகாப்பு, உள்விவகார, இடர் முகாமைத்துவ இராஜாங்க அமைச்சுக்காக மேலதிகமாக 152 பில்லியன் ரூபா ஒதுக்கப்படவுள்ளது.

இன்று நிதி அமைச்சர் என்ற வகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ வரவு செலவு திட்ட உரையை நிகழ்த்தியதன் பின்னர் நாளை தொடக்கம் 21 ஆம் திகதி வரை 4 நாட்கள் வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இடம்பெறவுள்ளது.

இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு 21 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

வரவு செலவு திட்டத்தின் குழுநிலை விவாதம் என்றழைக்கப்படுகின்ற மூன்றாவது வாசிப்பு மீதான விவாதம் நவம்பர் 23 ஆம் திகதி தொடக்கம் டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி வியாழக்கிழமை வரை 16 நாட்கள் நடைபெறவுள்ளது.

மூன்றாவது வாசிப்பு மீதான விவாதம் நிறைவில் டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி வியாழக்கிழமை பிற்பகல் 5 மணிக்கு வாக்கெடுப்பு நடைபெற்று அடுத்த ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் சார்ந்த நடவடிக்கைகள் முடிவுக்கு வரவுள்ளன.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பெற்ற தாய்யை தேடும், ஜேர்மனில் வசிக்கும் இலங்கை பெண்

இன்று 12 மணி நேர நீர் வெட்டு அமுலுக்கு

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 433 ஆக உயர்வு