உலகம்

முதன்முறையாக பைடன் வெற்றியை ஒப்புக் கொண்ட ட்ரம்ப்

(UTV |  அமெரிக்கா) – அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜோ பைடன் வெற்றியை முதன் முறையாக ஒப்புக் கொண்ட ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், இந்தத் தேர்தலை முறைகேடானது எனக் குறிப்பிட்டு விமர்சனம் செய்துள்ளார்.

இதுபற்றி அவர் பதிவிட்டுள்ளதாவது, தேர்தல் முறைகேட்டால் ஜோ பைடன் வெற்றி பெற்றுள்ளார். கண்காணிப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. தீவிர இடதுசாரி தனியார் நிறுவனத்துக்குச் சொந்தமான டொனினியன் அட்டவணைப்படுத்தியுள்ள வாக்குகளை வைத்து டெக்ஸாஸுக்குக் (அங்கு நான் பன்மடங்கு வித்தியாசத்தில் வென்றுள்ளேன்) கூட தகுதி பெற முடியாது.”

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டிரம்ப் தொடர்ச்சியாக தோல்வியை ஏற்க மறுத்து வந்தார். இந்த நிலையில், மோசடி என்று குறிப்பிட்டாலும் முதன்முறையாக பைடன் வெற்றியை ஒப்புக்கொண்டுள்ளார் டிரம்ப்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

காசா மக்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்கான பாதை – ஆராய்கின்றது அமெரிக்கா.

ரஷ்ய பிரதமருக்கு கொரோனா தொற்று உறுதி

ஜோர்ஜ் ப்ளொய்ட் கொலை – பொலிஸ் அதிகாரிக்கு பிணை