விளையாட்டு

பாகிஸ்தான் சுப்பர் லீக் தொடரின் இறுதி போட்டிக்கு லாகூர் அணி தகுதி

(UTV | பாகிஸ்தான் ) – பாகிஸ்தான் சுப்பர் லீக் (Pakistan Super League) இருபதுக்கு 20 சுற்றுத் தொடரின் இறுதி போட்டிக்கு லாகூர் கலண்டர்ஸ் (Lahore Qalandars) அணி தகுதி பெற்றுள்ளது.

குறித்த தொடரின் இரண்டாவது தகுதிகாண் போட்டி நேற்று இரவு இடம்பெற்றது.

முல்தான் சுல்தான் (Multan Sultans) மற்றும் லாகூர் கலண்டர்ஸ் (Lahore Qalandars) ஆகிய அணிகள் இந்த போட்டியில் பலப்பரீட்சை நடத்தின.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற முல்தான் சுல்தான் (Multan Sultans) அணி முதலில் களத்தடுப்பைத் தெரிவு செய்துள்ளது.

இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய லாகூர் கலண்டர்ஸ் (Lahore Qalandars) அணி 6 விக்கெட் இழப்புக்கு 182 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

லாகூர் கலண்டர்ஸ் (Lahore Qalandars) அணி சார்பில் பக்ஹர் ஸமான் 46 ஓட்டங்களையும் டேவிட் வைஸ் 48 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

183 எனும் வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய முல்தான் சுல்தான் (Multan Sultans) அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 157 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

இதன்படி லாகூர் கலண்டர்ஸ் (Lahore Qalandars) அணி 25 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

இந்த நிலையில் இறுதி போட்டியில் லாகூர் கலண்டர்ஸ் (Lahore Qalandars) அணி கராச்சி கிங்க்ஸ் (Karachi Kings) அணியை சந்திக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

 

Related posts

லெபனான் அணியை சந்திக்கும் இலங்கை அணி

அஷ்வின் அணிக்கு திரும்ப வாய்ப்பில்லை

பிரெஞ்ச் டென்னிஸ் போட்டித் தொடர்கள் திட்டமிட்டவாறு நடைபெறும்