(UTV | கொழும்பு) – சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாது பயணிக்கும், பேரூந்துகளை கண்காணிக்கும் விசேட வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்திருந்தார்.
மேலும் விதிமுறைகளைப் பின்பற்றாத பேரூந்துகளின் அனுமதிப்பத்திரத்தை இரத்துச் செய்யப்படுமெனவும் அடுத்த வாரம் முதல் இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.
சுகாதார நடைமுறைகளை பின்பற்றாது பயணித்த ஐந்து பேரூந்துகளது அனுமதிப்பத்திரத்தை இரத்து செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.