உலகம்

அகதிகள் படகு கடலில் மூழ்கி விபத்து – 94 பேர் பலி

(UTV | லிபியா) –  லிபியாவில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு குடியேற சென்ற அகதிகளின் படகுகள் நடுக்கடலில் விபத்துக்குள்ளானதில் 94 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.

போராளிக் குழுக்கள் அரசுப்படையினர் இடையேயான மோதலில் பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த மோதலில் இருந்து தப்பித்து உயிரை பாதுகாத்துகொள்ள லிபியாவில் வாழும் மக்கள் பலர் ஜெர்மனி, இத்தாலி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் புகலிடம் தேடி சட்ட விரோதமாக கடல் ஆபத்தான பயணம் மேற்கொள்கின்றனர்.

இந்நிலையில், லிபியா நாட்டின் திரிபோலி இருந்து 120 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஹாம்ஸ் என்ற நகரின் பகுதிக்குள் அமைந்துள்ள மத்திய தரைக்கடல் பகுதியில் 120-க்கும் மேற்பட்ட பயணிகள் ஒரு படகில் சட்டவிரோதமாக ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.

ஆனால், மோசமான வானிலை காரணமாக அகதிகள் சென்ற படகு இன்று கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 74 பேர் உயிரிழந்தனர்.

மற்றொரு படகில் 50-க்கும் அதிகமான அகதிகள் ஐரோப்பாவிற்கு பயணம் மேற்கொண்டனர்.

அவர்கள் சென்ற படகும் நடுக்கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான விபத்தில் 20 பேர் உயிரிழந்தனர்.

இதனால், லிபியாவின் மத்திய தரைக்கடல் பகுதியில் இன்று ஒரே நாளில் நடந்த படகு விபத்துக்களில் அகதிகள் 94 பேர் உயிரிழந்தனர்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பிரபல பாலிவுட் பாடகர் KK காலமானார்

இத்தாலி ஜெட் விமான விபத்தில் எட்டு பேர் பலி

உலகின் 8வது அதிசயமாக அறிவிக்கப்பட்ட கோயில்!