(UTV | கொழும்பு) – கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கொழும்பு நகரம் அபாயநிலையினை எதிர்கொண்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த 5 நாட்களில் கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் சுமார் 1083 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளமை காரணமாக, கொழும்பு நகரம் ஆபத்தான நிலையினை எதிர்கொண்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக கொழும்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் தினசரி 200க்கும் மேற்பட்ட கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதனால் அவதான வலயங்கள் தொடர்பில் நாம் கவனம் செலுத்த வேண்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්