உள்நாடு

உயிரிழந்த உடல்களின் தகனம் : ஐ.நா பிரதமருக்கு கடிதம்

(UTV | கொழும்பு) – உயிரிழந்த உடல்களின் தகனம் என்பது அவரவர் கலாச்சார தேர்வுகளை அடிப்படியாக கொண்டவை என ஐ.நா.அபிவிருத்தி திட்டத்தின் பிரதிநிதியுமான ஹனா சிங்கர், இலங்கை அரசாங்கத்திற்கு அறிக்கை ஒன்றினூடாக தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸினால் உயிரிழந்த முஸ்லிம்களின் உடல்கள் தகனம் செய்யப்படுவதற்கு, முஸ்லிம் சமூகம் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது.

அதேபோன்று முஸ்லிம் சமூகத்தின் கோரிக்கை நியாயமானது என்றதன் அடிப்படையில் பல சமூக அமைப்புக்களும் அவர்களுக்கு ஆதரவாக கருத்துக்களை வெளியிட்டு வருகின்றன.

இந்நிலையிலேயே, இவ்விடயம் தொடர்பாக இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு, ஐ.நா.அபிவிருத்தி திட்டத்தின் பிரதிநிதியுமான ஹனா சிங்கர் எழுதியுள்ள கடிதத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த கடிதத்தில் அவர் மேலும் கூறியுள்ளதாவது,

“தொற்று நோயால் இறந்தவர்கள் மூலம் வைரஸ் பவவுவதைத் தடுப்பதற்கு, அந்த உடலங்கள் தகனம் செய்யப்பட வேண்டும் என்ற பொதுவான அனுமானம், ஆதாரங்களால் உறுதிப்படுத்தப்படவில்லை. அதற்கு பதிலாக தகனம் என்பது அவரவர் கலாசார தேர்வுகளை அடிப்படையாக கொண்டவை” எனஅவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்யும்போது சிறுபான்மையினரின் உரிமைகளை அரசாங்கம் மதிக்கவேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.

மேலும், கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யலாம் என உலக சுகாதார ஸ்தாபனம் வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களை அரசாங்கம் பின்பற்றவேண்டும் எனவும் அந்த சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

விசா செல்லுபடியாகும் காலம் மேலும் 30 நாட்களுக்கு நீடிப்பு

பாடசாலைகள் மீள ஆரம்பிக்கும் திகதி அறிவிப்பு

சஜித் அணியினரும் ஆர்ப்பாட்டத்தில்