(UTV | கொழும்பு) – இலங்கையில் இதுவரையில் 15,723 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக கொவிட் 19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
நேற்றைய தினம் 373 பேர் புதிதாக இனங்காணப்பட்டதை அடுத்து இந்த தொகை அதிகரித்துள்ளது.
அதனடிப்படையில் மினுவங்கொட மற்றும் பேலியகொட கொரோனா கொத்தணியில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 12,227 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவர்களுள் 1,041 பேர் ஆடை கைத்தொழிற்சாலை ஊழியர்கள் மற்றும் 1,007 பேர் மீன் சந்தை ஊழியர்கள் என்பதுடன் ஏனைய 10,178 பேர் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
இதுவரையில் 10,653 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளதுடன் 5,022 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இலங்கையில் இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி 48 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්