உள்நாடு

சுமார் 14 இலட்சம் குடும்பங்களுக்கு நிவாரண நிதி

(UTV | கொழும்பு) – கொவிட் 19 தொற்று நிலைமையினால் நிர்க்கதியாகியுள்ள மக்களுக்காக முன்னெடுக்கப்படும் அரச நிவாரண நடவடிக்கைகளில் இதுவரை சுமார் 14 இலட்சம் குடும்பங்களுக்கு 5,000 ரூபா கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் 43,000 குடும்பங்களுக்கு 10,000 ரூபா பெறுமதியான உலர் உணவு பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.

கடந்த மாதத்திற்குள்ளும் இம்மாதம் 10 ஆம் திகதி வரையிலும் இவை வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இதற்காக திறைசேரியிலிருந்து 7.56 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மாவட்டத்தில் 7,500 குடும்பங்களுக்கும் கம்பஹா மாட்டத்தில் 7,000 குடும்பங்களுக்கும் களுத்துறை மாவட்டத்தில் 4,000 குடும்பங்களுக்கும் 10,000 ரூபா பெறுமதியான உலர் உணவு பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதேவேளை 5,000 ரூபா கொடுப்பனவிற்காகவே அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவிக்கின்றது.

இதனை தவிர, 16 மாவட்டங்களில் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளுக்காக திறைசேரியினால் மேலதிமாக 78.06 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.’

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

விமானப்படை வீரர் ரொஷான் அபேசுந்தரவின் சாதனை

ஜனாதிபதி அலுவலகத்திற்கு சொந்தமான வாகனங்களுக்கு காப்புறுதி இல்லை!

இலங்கையில் சுற்றித்திரியும் – பிரித்தானிய முன்னாள் பிரதமர் டேவிட் கெமரூன்!