(UTV | கொழும்பு) – மேல் மாகாணத்தில் கொரோனா பரவல் அச்சுறுத்தல் அதிகரித்து வரும் நிலையில், எதிர்வரும் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் தனிமைப்படுத்தல் ஊரடங்கினை நடைமுரைபப்டுத்தும் எண்ணமில்லை என இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஷவேந்திரா சில்வா தெரிவித்திருந்தார்.
அதற்கு மாறாக, கொரோனா தொற்று அதிகரித்துள்ள பகுதிகளினை முடக்கும் செயற்பாடுகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.
உடன் அமுலுக்கு வரும் வகையில் நேற்று முதல் மேல் மாகாணத்தில் உள்ளவர்கள் வேறு மாகாணங்களுக்கு பயணிக்க அரசாங்கம் பயணத்தடை விதித்திருந்தது.
எதிர்வரும் 15 ஆம் திகதி நள்ளிரவு 12 மணி வரையில் இந்த பயணத்தடை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களில் இருந்து வௌியேறவோ அல்லது உள்நுழையவோ எவருக்கும் அனுமதி அளிக்க வேண்டாம் என ஜனாதிபதி அதிகாரிகளுக்கு நேற்றைய தினம் ஆலோசனை வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.